திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By mahendran
Last Modified: வியாழன், 22 ஜூலை 2021 (11:08 IST)

இந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி இங்கிலாந்துடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக அந்த நாட்டுக்கு சென்றுள்ளது. இப்போது இங்கிலாந்து அணி பாகிஸ்தானுடன் ஒரு நாள் தொடரில் விளையாடும் நிலையில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது.

இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான இங்கிலாந்து தொடர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணி :-

ஜோ ரூட் (கேப்டன்), ஆண்டர்சன், பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ, டாம் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜாஸ் பட்லர், ஜாக் கிராலி, சாம் கரண், ஹசீப் ஹமீது, டேன் லாரன்ஸ், ஜாக் லீச், ஆலி போப், ஆலி ராபின்சன், டாம் சிப்லி, மார்க் உட்.