15 நிமிடங்களில் விற்று தீர்ந்த சிஎஸ்கே போட்டிக்கான டிக்கெட்: ரசிகர்கள் ஏமாற்றம்..!
சென்னையில் நடைபெற உள்ள சிஎஸ்கே போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை தொடங்கிய நிலையில், 15 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுவிட்டதாக வெளிவந்த தகவல், ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
18வது ஐபிஎல் தொடர் வரும் 22ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக, 23ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டிக்கெட் இன்று காலை 10:15 மணிக்கு ஆன்லைன் மூலம் விற்பனைக்கு விடப்பட்டது. ஆனால், 10:30க்குள் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுவிட்டதால், பலரும் ஏமாற்றமடைந்தனர்.
மேலும், சிலருக்கு இணையதளத்தில் கோளாறு ஏற்பட்டதால், அவர்கள் டிக்கெட் பெற முடியாமல் சிரமத்திற்கு உள்ளானதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், சட்டத்துக்கு புறம்பாக சில இடங்களில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், அதிக விலைக்கு கள்ளச் சந்தையில் டிக்கெட்டுகள் விற்பதால் உண்மையான ரசிகர்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன. இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Edited by Siva