வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 19 அக்டோபர் 2018 (20:36 IST)

’மேட்ச் பிக்ஸிங்’ குற்றத்தை ஒப்புக்கொண்ட கிரிக்கெட் வீரர்…

ஒரு காலத்தில் கனேரியா மாதிரி பந்தி வீசு என்று சொல்லும் அளவுக்கு நம்மவர்கள் முதற்கொண்டு மேலை நாட்டவர்கள் கூட அவரது  சுழல் பந்து வீச்சு முறைக்கு தேசத்தைக் கடந்து விசிறிகளாக இருந்தனர் என்றே சொல்லலாம்.அந்த அளவுக்கு பலரையும் வசீகரித்தவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கனேரியா .

ஆனால் இவர் மீது மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டு  எழுந்ததையடுத்து ஐசிசி அவருக்கு விளையாட ஆயுள்கால தடைவிதித்தது. இருப்பினும் இந்த குற்றச்சாட்டை மறுத்து வந்தார் கனீரியா.

இந்நிலையில் கடந்த 2001 ஆண்டில் இந்திய தொழில்  அதிபர் ஒருவரின் பார்ட்டியில் கனேரியா பங்கேற்றதாகவும் அவர் கூறியது போல தான் அடுத்து விளையாடப்போகிற போட்டியில் குறிப்பிட்ட ஓவரில் பந்து வீசும் போது எதிரணிக்கு ரன்கள் வாரி வழங்க வேண்டுமென அவர் கேட்டுக்கொள்ள இந்த மேட்ச் பிக்ஸிங்கிற்காக ஒரு கனிசமான தொகையை  கனீரியா பெற்றுக் கொண்டதாகவும் ஐசிசி குற்றம் சாட்டியிருந்தது.

தற்போது கனீரியா தான் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்ட குற்றத்தை  ஒத்துக்கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.