வியாழன், 14 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 11 ஜூலை 2021 (08:07 IST)

கோபா அமெரிக்கா கால்பந்து ஃபைனல்: பிரேசிலை வீழ்த்தியது அர்ஜெண்டினா

கோபா அமெரிக்கா கால்பந்து ஃபைனல்: பிரேசிலை வீழ்த்தியது அர்ஜெண்டினா
கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி பிரேசில் அணியை வீழ்த்தி சாதனை வெற்றி பெற்றுள்ளது 
 
மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றதை அடுத்து உலகம் முழுவதும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அர்ஜெண்டினா அணி 15 முறை கோபா அமெரிக்கா தொடரை வென்றுள்ளது என்பதும் இதனை அடுத்து உருகுவே நாட்டின் சாதனையை சமன் செய்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த போட்டியில் பிரேசில் மற்றும் அர்ஜென்டினா ஆக்ரோஷமாக மோதிய நிலையில் ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் ஏஞ்சல் டி மரியா என்பவர் ஒரு கோல் போட்டார். அதன்பின் இரு அணிகளும் கோல் போடவில்லை என்பதால் அர்ஜென்டினா அணி கோபா அமெரிக்க கால்பந்து தொடரை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
சொந்த நாட்டில் நடந்த இறுதி போட்டியில் பிரேசில் அணி தோல்வியுற்றதால் அந்நாட்டு ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் ஆகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது அது