1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 29 பிப்ரவரி 2020 (22:35 IST)

அதிசயம் ஆனால் உண்மை! இறுதி போட்டியை நோக்கி சென்னை அணி

இறுதி போட்டியை நோக்கி சென்னை அணி
ஐஎஸ்எல் கால்பந்து போட்டி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த போட்டியில் முதல் 8 போட்டிகளில் படுமோசமாக சென்னை அணி விளையாடியதால் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதன் பின்னர் சென்னை அணியின் பயிற்சியாளர் எடுத்த அதிரடி நடவடிக்கைகள் மூலம் ஒரு சில வீரர்கள் மாற்றப்பட்டனர். இதன் பின்னர் சென்னை அணி தொடர் வெற்றி பெற்று அரைஇறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று நடைபெற்ற கோவா அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் சென்னை அணி வீரர்கள் மிக அபாரமாக விளையாடி வெற்றி பெற்றுள்ளனர். சென்னை அணி நான்கு கோல்களும் கோவா அணி ஒரு கோல் மட்டுமே போட்டதை அடுத்து சென்னை அணி சூப்பர் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற அதிக வாய்ப்பை பெற்றுள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த வெற்றியால் சென்னை சென்னை அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் சென்னை அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது என்று கூற முடியாது. ஏனெனில் இன்னொரு அரையிறுதிப் போட்டியை அதே கோவா அணியுடன் நடைபெற உள்ளது என்பதும்  அதன்பின்னரே இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் அணி குறித்த அறிவிப்பு வெளிவரும் என்பதும் குறிப்பிடத்தக்கது