பால்கோவா மாதிரி இருக்கீங்க... தூக்கலா பண்ணுங்க - ரெக்யூஸ்ட் செய்த ஹர்பஜன் சிங்!
முதன்முறையாக பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கியுள்ளார். "பிரண்ட்ஷிப்" என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இருவரையும் இணைந்து இயக்குகின்றனர்.
ஷேண்டோ ஸ்டுடியோ & சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் பிக்பாஸ் புகழ் லாஸ்லியா கதா நாயகியாக அறிமுகமாகிறார். மேலும் இப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரித்திருந்தது.
இந்நிலையில் தற்போது இப்படத்தில் காமெடி நடிகர் சதிஷ் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முக்கிய நடிகர்கள் பலர் இணைந்துள்ள இப்படம் நிச்சயம் வித்யாசமான கதையம்சம் கொண்ட படமாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.