1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 7 பிப்ரவரி 2019 (10:18 IST)

சர்ச்சைப் பேச்சு – ராகுல், பாண்ட்யா மீது வழக்கப்பதிவு !

காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து சர்ச்சையானக் கருத்துகளைப் பேசிய ராகுல் மற்றும் பாண்ட்யா இருவர் மீதும் ஜோத்பூர் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 6 ஆம் தேதி ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே எல் ராகுல் பங்குபெற்ற காஃபி வித் கரண் நிகழ்ச்சி ஒளிப்பரப்பனது. இந்த நிகழ்ச்சியை பாலிவுட் இயக்குனர் கரன் ஜோஹர் தொகுத்து வழங்கினார். இதில் சமூகவலைதளங்கள், பெண்கள் மற்றும் இந்திய அணியின் ஓய்வறை தொடர்பான கேள்விகளுக்குப் பாண்ட்யா மற்றும் ராகுல் இருவரும் சர்ச்சைக்குரிய பதிலைக் கூறினர்.

இதையடுத்து பாண்ட்யா மற்றும் ராகுலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. அதனால் பாண்டியா, ராகுல் இருவரும் அவர்களின் பேச்சுககு விளக்கம் அளிக்க வேண்டும் பிசிசிஐ நோட்டிஸ் அனுப்பியது. மேலும் ஆஸ்திரேலியா தொடரின் பாதியிலேயே இருவரும் நாட்டிற்கு அழைக்கப்பட்டனர். மேலும் நியுசிலாந்து தொடரிலும் இருவரும் கழட்டிவிடப்பட்டனர். இதுதொடர்பாக ராகுல், பாண்ட்யா மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் கரன் ஜோகர் ஆகிய மூவரும் சமூக வலைதளங்களில் மன்னிப்புக் கேட்டனர்.

ஜனவரி 24 ஆம் நாள் இருவர் மீதானக் குற்றச்சாட்டு தொடர்பாக புதிதாக நியமிக்கப்பட்ட சிறப்பு நம்பிக்கை ஆலோசகர் பி.எஸ்.நரசிம்மாவை சந்தித்துப் பேசிய உச்ச நீதிமன்ற நியமன பிசிசிஐ-யின் நிர்வாகக் கமிட்டி இருவர் மீதான இடைக்காலத் தடையை நீக்குவதாக அறிவித்தார். இதையடுத்து ஹர்திக் பாண்ட்யா இப்போது நியுசிலாந்து தொடரில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் மற்றும் பாலிவுட் இயக்குநர் கரன் ஜோகர் ஆகியோர் மீது ஜோத்பூர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.