திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 18 ஜூலை 2017 (19:31 IST)

கங்குலியை தூக்கி எறிந்து; ரவி சாஸ்திரியிடம் பணிந்த பிசிசிஐ!!

ராகுல் டிராவிட் மற்றும் ஜாகீர் கான் நியமனத்தை தடை செய்து வைத்திருந்த பிசிசிஐ தற்போது அவர்களுக்கு பதிலாக ரவி சாஸ்திரி பரிசீலித்தவர்களை நியமணம் செய்துள்ளது.


 
 
ரவி சாஸ்திரி 2019 ஆண்டு நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பவுலிங் பயிற்சியாளராக ஜாகிர் கானையும், பேட்டிங்க பயிற்சியாளர்களாக டிராவிட்டையும் கங்குலி சிபாரிடு செய்தார். 
 
ஆனால், இவர்களின் நியமனம் ரவி சாஸ்திரிக்கு பிடிக்காமல் கங்குலியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  ஜாகீர் காகுக்கு பதில் பரத் அருணை பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என கூறினார்.
 
எதிர்பார்த்தது போலவே, பரத் அருண் பவுலிங் பயிற்சியாளராக இன்று பிசிசிஐ-யால் நியமிக்கப்பட்டுள்ளார்.