வெற்றியின் விளிம்பில் ஆஸ்திரேலியா…. போராடும் இங்கிலாந்து- ஆஷஸ் அப்டேட்!
அடிலெய்டில் நடந்துவரும் இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாளில் ஆஸி அணி வெற்றி பெற இன்னும் நான்கு விக்கெட்களே தேவை.
ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று நடந்து வருகிறது. இந்த போட்டியில் தடுமாறி வரும் இங்கிலாந்து அணி 6 விக்கெட்களை இழந்து 125 ரன்கள் சேர்த்துள்ளது. இன்னும் 4 விக்கெட்களை ஆஸி அணி எடுத்தால் இரண்டாவது போட்டியையும் வென்று தொடரை 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெறும்.
இங்கிலாந்து அணியில் கடைசி நம்பிக்கையாக ஜோஸ் பட்லர் மட்டுமே இன்னும் களத்தில் உள்ளார்.