நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா அபார வெற்றி!
நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 296 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது
இந்த போட்டி கடந்த 12ம் தேதி தொடங்கிய நிலையில் டாஸில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து அந்த அணி முதல் இன்னிங்சில் 416 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதன்பின் முதல் இன்னிங்ஸில் விளையாடிய நியூசிலாந்து அணி 166 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது. எனவே நியூசிலாந்து அணிக்கு 468 என்ற இலக்கை கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த அணி 171 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. எனவே ஆஸ்திரேலிய அணியில் 296 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது
இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர் ஸ்டார்க் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்