புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 17 டிசம்பர் 2020 (16:58 IST)

முதல் நாளில் ஆமை வேகம் – இந்திய பேட்ஸ்மேன்களைக் கட்டுப்படுத்திய ஆஸி பவுலர்கள்!

இந்திய அணி ஆஸி அணிக்கு எதிரான போட்டியின் முதல் நாளில் இந்திய அணி 207 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்துள்ளது.

ஆஸ்திரேலியா – இந்தியா இடையேயான சுற்றுப்பயண ஆட்டம் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. முன்னதாக ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவும், டி20 போட்டியில் இந்தியாவும் வென்ற நிலையில் இன்று டெஸ்ட் போட்டிகள் தொடங்கி நடந்து வருகிறது. இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க பேட்ஸ்மேனான ப்ரித்விஷா ஒரு ரன் கூட அடிக்காமல் வந்த வேகத்திற்கே அவுட் ஆகி திரும்பினார்.

தொடர்ந்து விளையாடிய இந்திய அணியில் மயங்க் அகர்வால் 17 ரன்களிலும், புஜாரா 43 ரன்களிலும், ரஹானே 42 ரன்களிலும், ஹனுமா விஹாரி 16 ரன்களிலும் அவுட் ஆகினர். மறுபக்கத்தில் கேப்டன் கோலி மட்டிம் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்தார். 73 ரன்கள் சேர்த்த அவர் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். இதையடுத்து இந்திய அணி இப்போது 6 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.