செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியாவுக்கு இன்று இரண்டாவது போட்டி!

india vs hongkong
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரில் இந்தியா முதல் போட்டியில் ஏற்கனவே பாகிஸ்தானை வீழ்த்தி உள்ள நிலையில் இன்று 2வது போட்டியில் ஹாங்காங் அணியுடன் விளையாடவுள்ளது. 
 
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 27ஆம் தேதி தொடங்கிய நிலையில் முதல் போட்டியில் இலங்கை அணியை ஆப்கானிஸ்ஹான் வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்திய நிலையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் வங்கதேச அணியை ஆப்கானிஸ்தான் வீழ்த்தியது. இதனை அடுத்து ஆப்கானிஸ்தான் 4 புள்ளிகளும் இந்தியா ஒரு வெற்றியுடன் இரண்டு புள்ளிகளும்  பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்தியா இன்று ஹாங்காங் அணியுடன் மோதவுள்ளது. ஹாங்காங் அணியுடன் ஒப்பிடும் போது இந்தியா பலம் வாய்ந்த அணி என்பதால் இன்றைய போட்டியில் எளிதில் வெற்றி பெற்று இரண்டாவது வெற்றியை பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இன்றைய போட்டி துபாய் மைதானத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது