வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 22 டிசம்பர் 2021 (18:06 IST)

ஆசிய கோப்பை சாம்பியன் ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!

ஆசிய கோப்பை சாம்பியன் ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!
ஆசிய சாம்பியன் கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்தியா வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்று உள்ளதை அடுத்து இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 
 
கடந்த சில நாட்களாக ஆசிய சாம்பியன் கோப்பைக்கான ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் இந்த போட்டி தொடரின் 3வது இடத்திற்கான போட்டி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் மிக அபாரமாக விளையாடிய நிலையில் இந்திய அணி அதிரடியாக கடைசி நேரத்தில் நிலையில் 4 கோல்கள் போட்டது. பாகிஸ்தான் மூன்று கோல்கள் மட்டுமே போட்டதை அடுத்து 4-3 என்ற கணக்கில் பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா அபாரமாக வெற்றி பெற்றது. 
 
இதனை அடுத்து மூன்றாவது இடம் பிடித்த இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது என்பதும் இந்திய ஆக்கி அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது