1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 14 நவம்பர் 2017 (12:08 IST)

இவர் மட்டும் பந்து வீசினால்...... அமெரிக்காவில் ட்ரெண்டான அஸ்வின்

இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் பவுலிங் குறித்து அமெரிக்க சீரியலில் பேசப்பட்டதால் ஒரே நாளில் அமெரிக்காவில் அஸ்வின் ட்ரெண்டாகிவிட்டார்.


 

 
‘தி பிக் பேங்க் தியரி’ என்ற பிரபல அமெரிக்க சீரியலில் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் குறித்து பேசி இருக்கிறார்கள். பாண்டியா, புவனேஷ்வர்குமார் குறித்தும் பேசியுள்ளனர். தற்போது இந்த வீடியோ டுவிட்டரில் வெளியாகி வைரலாகியுள்ளது. இதனால் அமெரிக்கா முழுவதும் அஸ்வின் ட்ரெண்டாகிவிட்டார்.
 
அந்த சீரியலில் நடிப்பவர்களில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவராக நடித்துள்ளார். அவர் அடிக்கடி இந்தியா குறித்து பேசுவார். இந்நிலையில் கிரிக்கெட் வீரர் அஸ்வின் குறித்து பேசி இருக்கிறார். அதாவது, அஸ்வின் மட்டும் பந்து வீசினால் பாண்டியா கூட புவனேஷ்வர்குமார் ஆகிவிடுவார் என்று பேசியுள்ளார்.
 
அவர் பேசிய வசனத்தில் அர்த்தம் இல்லையென்றாலும், இதன்மூலம் அஸ்வின் அமெரிக்காவில் பிரபலமாகிவிட்டர். இதனால் அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.