புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By

பாகிஸ்தான் வீரர்கள் திறமைசாலிகள்… இந்திய வீரர்களோடு ஒப்பிடக்கூடாது – பாகிஸ்தான் முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!

பாகிஸ்தான் அணியின் வீரர்கள் அதீத திறமைசாலிகள் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் அவ்வப்போது இந்திய கேப்டன் கோலியோடு ஒப்பிடப்பட்டு வருகிறார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்களை ஒப்பிடவேண்டுமானால் இரு நாடுகளுக்கும் இடையே தொடர் நடத்தி அதன் பின்னரே முடிவு செய்யவேண்டும் என அப்துல் ரசாக் கூறியுள்ளார்.

இது சம்மந்தமாக பேசியுள்ள ரசாக் ‘முதலில் நம் நாட்டு வீரர்களை இந்திய அணியின் வீரர்களோடு ஒப்பிடவே முடியாது. இந்திய வீரர்களை விட பாகிஸ்தான் வீரர்கள் மிகத் திறமை வாய்ந்தவர்கள். கடந்த காலத்தில் பார்த்தால் நம்முடைய வீரர்கள் சிறப்பாக விளையாண்டுள்ளார்கள். அவர்களை நாம் எந்த இந்திய வீர்ரகளுடனும் ஒப்பிட முடியாது. விராட் கோலியும், பாபர் ஆஸமும் முற்றிலும் வேறுபட்ட வீரர்கள்.

கோலி பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக விளையாடியுள்ளார்.  அவருக்கு எதிராக நான் பேசவில்லை. அவர்கள் எப்படி நம் வீரர்களோடு ஒப்பிட்டு பேசுவது இல்லையோ அது போல நாமும் நம் வீரர்களை அவர்களோடு ஒப்பிடக்கூடாது’ எனக் கூறியுள்ளார்.