செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 10 மார்ச் 2021 (20:19 IST)

''கொரோனாவை வென்ற மாமனிதன்'' ! இயக்குநரை பாராட்டிய சிம்பு பட தயாரிப்பாளர்.

சீனாவில் இருந்து கடந்தாண்டு உலகெங்கிலும் பரவியது கொரோனா வைரஸ். இது ஓரளவு குறையும் நிலையில் இருந்த நிலையில் தற்போது இரண்டாவது அலைபரவி வருகிறது. இதனால் நாள்தோறும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் வரும் 31 ஆம் தேதிவரை கொரோனா கால ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியா முழுவதும் கொரோனவுக்கான தடுப்பூசி பலரும் போட்டுக்கொள்கின்றனர். இதற்க்கு மும்மாதிரியாக அமைச்சர்களும், அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில்  விஜய் சேதுபதியை வைத்து மாமனிதன் படத்தை இயக்கிவரும் சீனுராமசாமி இன்று கொரோனா தடுப்பூசிபோட்டுக்கொண்டார்.

இதுகுறித்த புகைப்படத்தை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இதற்கு சிம்புவின் மாநாடு படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கொரோனாவை வென்ற மாமனிதன் எனப் பாராட்டியுள்ளார்.