புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 8 ஜூலை 2021 (12:32 IST)

தோல்வியடைந்த ஃபெடரர்; எழுந்து நின்று கரவொலி எழுப்பிய ரசிகர்கள்

அதிக கிராண்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனை படைத்த சுவிட்சர்லாந்து நாட்டின் ரோஜர் ஃபெடரர் விம்பிள்டன் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் நேர் செட்களில் தோல்வியடைந்து வெளியேறினார்.

 
20 கிராண்ஸ்லாம் பட்டம் பெற்ற அவரை போலந்து நாட்டின் ஹியூபெர்ட் ஹர்கேக்ஸ் வீழ்த்தினார். கடைசி செட்டில் 0-6 என்ற புள்ளிகள் கணக்கில் ஃபெடரர் தோல்வியடைந்தது ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சியாக அமைந்தது.
 
இதுவரை ரோஜர் பெடரர் பங்கேற்ற விம்பிள்டன் போட்டிகளில் ஒன்றில் கூட புள்ளிகள் ஏதும் பெறாமல் செட்டை இழந்ததில்லை. ரோஜர் பெடரர் தோல்வியடைந்தாலும் விம்பிள்டன் மைய அரங்கில் கூடியிருந்தவர்கள் அவருக்கு எழுந்து நின்று கரவொலி எழுப்பினார்கள்.
 
ரோஜர் பெடரரின் அதிர்ச்சித் தோல்வி குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. தனது தொலைக்காட்சிப் பெட்டியை போட்டியின் பாதிலேயே அணைத்து விட்டதாக பல ரசிகர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
 
போட்டிக்குப் பிறகு பேசிய ஃபெடரர் தனது ஓய்வு குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை எனத் தெரிவித்தார். 39 வயதான ஃபெடருக்கு அண்மையில் மூட்டு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.