3வது டி20 போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச முடிவு
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று டி20 போட்டி தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளதால் தொடரை வெல்லும் அணி எது? என்பதை முடிவு செய்யும் 3வது டி20 போட்டி இன்று ஹாமில்டன் நகரில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் சற்றுமுன் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச முடிவு செய்துள்ளார். இதனால் இன்னும் சற்று நேரத்தில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்யவுள்ளது.
இந்திய அணியில் ரோஹித் சர்மா, தவான், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் ஆகிய பேட்ஸ்மேன்களும், ஷங்கர், ஹர்திக் பாண்ட்யா ஆகிய ஆல்ரவுண்டர்களும், புவனேஷ்குமார், குல்தீப் யாதவ், அஹ்மது ஆகிய பவுலர்களும் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் தோனியும் உள்ளனர்.
அதேபோல் நியூசிலாந்து ஆணி முண்ட்ரோ, வில்லியம்சன், டெய்லர் ஆகிய பேட்ஸ்மேன்களும், கிராந்தோம், சாட்னர், குஜிலிஜின் ஆகிய ஆல்ரவுண்டர்களூம், செளதி, சோதி ஆகிய பந்துவீச்சாளர்களும், செய்ஃபெர்ட் விக்கெட் கீப்பராகவும் களத்தில் இறங்கவுள்ளனர்.