ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

பைரவருக்கு உகந்த வெண்கடுகு கொண்டு தீய சக்திகளை விரட்ட...!!

வெண் கடுகு சாமான்யமான பொருள் கிடையாது. அது தெய்வீக தன்மையை உடையதாகும். அதுமட்டுமல்ல, அது கால பைரவரின் தேவகணமாகவும் விளங்குகிறது. இதில் தான் பைரவர் குடிகொண்டுள்ளார்.

ஒரு மண்டலம் பைரவப் பெருமானுக்கு வெண்கடுகு, இலாமச்சம்வேர், சந்தனம், அறுகு என்னும் நான்கையும் கொண்டு பாத பூஜை செய்தப் பின் சாம்பிராணியை  தூபத்தை ஏற்றி வைத்து அதன் தூபத்தில் வெண் கடுகைப் போட்டு வீடு முழுவதும் அந்தப் புகையைக் காட்டினால் தீய சக்திகள் ஓடிவிடும்.
 
வெள்ளைக் கடுகுச் செடிகள் குளிர்ச்சியை தருபவை. அவை இமய மலையை சுற்றிக் காவல் புரியும் பைரவரின் தேவ கணங்கள். ஆகவேதான் அவை அதிகம் இமய மலை அடிவாரங்களில் காணப்படும். 
 
பிரபஞ்சத்தின் அனைத்து தீய சக்திகளைளையும் அடக்கி ஒடுக்கி வைத்துள்ளவர் பைரவர் ஆவார். ஆகவே வெண் கடுகு உள்ள இடத்தில் தீய சக்திகள் இருக்க முடியாது. அவை புகையாக மாறும்போது, அதன் உள்ளே உள்ள தேவ கணங்கள் தீய ஆவிகளை அடித்துத் துரத்தும்.
 
தேய்பிறை பைரவாஷ்டமி முன்னிட்டு வெண்கடுகை பைரவருக்கு சமர்ப்பிப்பது மிக விசேஷம். இது பூஜையில் வைத்து வீட்டுக்கு எடுத்துச் சென்று தூபங்களில்  (சாம்பிராணி) பயன்படுத்தினால் நம் அனைத்து விதமான சங்கடங்களும் நீங்கும். மேலும் லக்ஷ்மி கடாட்சம் கிடைக்கும்.
 
வீடுகளில் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் சாம்பிராணி தூபம் போடுவது வழக்கம். அப்படி செய்தால் நமது வீட்டை துஷ்ட சக்திகள் அண்டாது என்பது  ஐதீகம். அது போலவே சாம்பிராணியுடன் வெண் கடுகு சேர்த்து தூபம் போட்டு அந்த புகையை நம்முடைய வீட்டு பூஜையறை உள்ளிட்ட அனைத்து அறைகளிலும்  பரவச் செய்தால் தீய சக்திகள் ஓடிவிடும்.