Daily Horoscope
✕

இத்தனை சிறப்புகள் வாய்ந்ததா வைகாசி மாதம்....?

Written By Sasikala
Updated: வெள்ளி, 15 மே 2020 (11:49 IST)
 
* வைகாசி சுக்ல சதுர்த்தசியில்தான் மஹாவிஷ்ணு தன் பக்தன் பிரகலாதனுக்காக ஒரு நொடிப்பொழுதில் நரசிம்ம அவதாரம் எடுத்தார்.
 
*  கௌதம புத்தர் அவதரித்தது ஓர் வைகாசி பௌர்ணமி என்று வரலாறு சொல்கிறது. அவர், கயாவில் போதி மரத்தடியில் ஞானம் பெற்றதும் வைகாசி பௌர்ணமியே.
 
* வைகாசி மாத மூலநட்சத்திர நாள் திருஞானசம்பந்தரின் திருநட்சத்திர தினம். அன்று ஆச்சாள் புரத்தில் திருஞானசம்பந்தர் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
நம்மாழ்வார், திருக்கோட்டியூர் நம்பிகள் அவதரித்த மாதம் வைகாசி. 
 
* காஞ்சி மகாபெரியவர் அவதரித்ததும் வைகாசி பௌர்ணமியே. ஆதிசங்கரர் தோன்றியது வைகாசி பஞ்சமி.
 
* வைகாசி பௌர்ணமியன்று சிவபெருமானுக்கு மகிழம்பூ நிறத்தில் பட்டாடை சாற்றி, 108 பத்ம ராகக் கற்களாலான மாலை அணிவித்து, எள்சாதம் நிவேதனம் செய்து வழிபட்டால் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாபங்கள் நீங்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
 
* வைகாசி மாதம் சிவபெருமானை போற்றி கடைப்பிடிக்கப்படும் விரதம், "ரிஷப விரதம்' ஆகும்.
 
* வைகாசி விசாகத்தில் எமதர்மராஜன் அவதரித்ததாக புராணம் கூறுகிறது. ஆகையால் எமதர்மராஜன் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வாஞ்சியம் மற்றும் திருச்சி மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள திருப்பைஞ்ஞீலி திருத்தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

எல்லாம் காட்டு

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments