மக்கள் இந்நாளில் விரதம் மேற்கொள்கின்றனர். அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்து குளிர்ந்த நீரில் நீராடி வீட்டிலோ அல்லது அருகில் உள்ள கோவிலுக்கோ சென்று வழிபாடு மேற்கொண்டு விரதத்தைத் தொடங்குகின்றனர். பின் பகல் முழுவதும் உணவருந்தாமலோ அல்லது பால், பழத்தினை உண்டோ சஷ்டிக் கவசம், சண்முக கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களைப் பாடியும், ஓம் சரவண பவ என்ற மந்திரத்தை உச்சரித்தும் வருகின்றனர்....