Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடும் தோஷங்களையும் விலக செய்யும் வலம்புரி சங்கு !!

Written By Sasikala
Updated: சனி, 9 ஜனவரி 2021 (14:23 IST)

இந்த சங்குகள் தினசரி வெள்ளி தாளில் வைத்து பிறகு பூஜிக்கப்படுகிறது. இத்தகைய சங்குகள் செல்வம், மகிழ்ச்சி, அதிர்ஷ்டம் இவைகளை தருகிறது. இத்தகைய வலம்புரி சங்குகள் நல்ல எதிர்காலத்தையும், செல்வத்தையும், சுகங்களையும் தருகிறது.
 
வலம்புரி சங்கில் தீர்த்தம் துளசி இட்டு பூஜை செய்து மங்கள ஸ்நானம் செய்வது, சகல தோஷ நிவாரணம் ஆகும். வலம்புரி தீர்த்தம் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்வித்தாலும் கடும் தோஷங்கள் விலகும்.
 
கார்த்திகை சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையன்று இறைவனுக்கு சங்காபிஷேகம் செய்யப்படும்। அப்போது 108 சங்கு அபிஷேக பூஜைக்கு நடுவில் வலம்புரிச்சங்கு உருவத்தில் குபேரன் எழுந்தருளுவதாக ஐதீகம்.
 
கண்களுக்கு புலப்படாத வாஸ்து தோஷம் இருக்கும் வீட்டில், துளசி தீர்த்தத்தை சங்கில் இட்டு ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலை வேளையில் வீடுகளில் தெளித்து வந்தால் நன்மை உண்டாகும்.
 
ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள், செவ்வாய் தோறும் வலம்புரி சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்து வந்தால் திருமண பாக்கியம்  கைகூடும்.

எல்லாம் காட்டு

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்