தெய்வ சக்தியை ஈர்க்கும் ஆற்றல் கொண்ட ஸ்வஸ்திக்!!
தெய்வ சக்தியை ஈர்க்கும் ஆற்றல் கொண்டது. எல்லா தெய்வங்களுக்கும் இது பொதுவானது. விநாயகர், மகாலட்சுமி ஆகிய இருவருக்கும் உரிய மங்கலச் சின்னமாக கருதப்படுகிறது.
ஸ்வஸ்திக் சின்னத்தை வரைவதற்கென்று பிரத்யேகமான ஒரு முறை கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது, முதலில் இடமிருந்து வலமாக உள்ள மூன்று கோடுகளை வரைந்து கொள்ளவேண்டும். பின்னர், கீழிருந்து மேலாக மற்ற மூன்று கோடுகளையும் வரைய வேண்டும். இந்த முறைப்படிதான் சகல இடத்திலும் ஸ்வஸ்திக் சின்னம் அமைக்கப்பட வேண்டும்.
திருமாலின் கையிலிள்ள சக்ராயுதம் ஸ்வஸ்திக் வடிவில் இருக்கும். சூரியனின் சின்னமாகவும் இருக்கும். சூரியனின் சின்னமாகவும் கருதப்படும். செங்கோண வடிவில் மேலிருந்து கீழாகவும், இடமிருந்து வலமாகவும் ஒன்றுக்கு ஒன்று குறுக்கில் செல்லும் கோடுகள் இதில் இடல் பெற்று இருக்கும். ஸ்வஸ்திக் என்பதற்கு இடையூறு இல்லாதது என்று பொருள்.
யஜுர் வேதத்தில் இந்திரனைக் குறித்த ஸ்லோகத்தில் ஸ்வஸ்திக் என்பது தடையற்ற நல்வாழ்வு என்னும் பொருளில் இடம் பெற்றுள்ளது.
வாசல் மற்றும் பூஜை அறையில் ஸ்வஸ்திக் கோலமிட்டால் எட்டு திசைகளில் இருந்தும் எந்த இடையூறும் நம்மைத் தீண்டாது என்பது ஐதீகம். இதை வணங்கினால் உடல் நலம் மேம்படும். கண் திருஷ்டி போக்கும் பரிகாரமாக வீட்டில் ஸ்வஸ்திக் வரையும் வழக்கம் ஜெர்மனியில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்திய ஆன்மீக பண்பாட்டு ரீதியாக, வீட்டின் தலைவாசல், தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்களை வைக்கும் இடங்கள், பணப்பெட்டி, கல்லாப்பெட்டி, கணக்கு புத்தகம் மற்றும் குறிப்பேடுகள், வழிபாட்டுக்குரிய தலங்கள் ஆகிய சகல இடங்களிலும் ‘ஸ்வஸ்திக்’ வடிவ சின்னம் பயன்படுத்தப்படுகிறது.