1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

சுவாமி ஐயப்பனின் தவக்கோல விபூதி....!

ஐயப்ப சுவாமியின் கோயில், கேரள மலைப்பகுதியில் உள்ளது. எருமேலியிலிருந்து நாற்பத்திரண்டு மைல் தொலைவில் மலை, ஆறுகள் சூழ அமைந்துள்ளது.  சோலைகளுக்கும் உயர்ந்த மேடு, பள்ளங்களுக்கும் இடையில், நாற்புறமும் மலைகளால் சூழப்பட்டு நடுவில் சுவாமியின் சந்நிதானம் அமைந்துள்ளது.
ஒவ்வொரு தமிழ் மாதமும் சபரிமலை சன்னிதானம் திறக்கப்பட்டு, சுவாமிக்கு பூஜை செய்து பின்னர் மூடப்படும். அப்போது ஐயப்பனின் திருமேனி மீது விபூதியைக் கொட்டி, அவர் கையில் ஜெபம் செய்வதற்காக ஒரு ருத்ராட்ச மாலையையும் வைத்து விடுவார்கள். அடுத்த மாதம் நடை திறக்கும் வரை ஐயப்ப  சுவாமி தவம் புரிவதாக ஐதீகம்.
 
ஐயப்பனின் திருமேனியில் ஒரு மாதம் இருந்த அந்த விபூதி, ‘தவக்கோல விபூதி’ என்று அழைக்கப்படுகிறது. நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அந்த விபூதி  பிரசாதத்தை நெற்றியில் தரித்து, சிறிது உட்கொண்டால் நோய் குணமடையும் என்பது நம்பிக்கை.