குழந்தையின் திருஷ்டி பாதிப்புக்கள் குறைய செங்கலால் திருஷ்டி சுற்றி, பிறகு அந்த திருஷ்டி கழித்த செங்கல்லை போட்டு உடைத்து அந்த மண்ணை பூமிதாயை மனதில் நினைத்து கொண்டு, செங்கல் மண்ணை குழந்தையின் நெற்றியில் வைத்தால் அந்த குந்தைகளுக்கு திருஷ்டியால் உண்டாகும் பாதிப்பு குறையும்.
வீட்டுக்கு, அலுவலகத்துக்கு வருபவர்களின் பார்வையை, கெட்ட எண்ணங்களை, குரூர சிந்தனைகளை திசை திருப்புவதற்கு பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியை வரவேற்பறையில் அல்லது வீட்டின் உள்வாசலில் வைக்கலாம்.
திருஷ்டியால் உண்டாகும் பாதிப்பு குறைய இல்லத்தில் மீன் தொட்டி வைத்து அதில் கருப்பு சிகப்பு மீன்களை வளர்க்கலாம். வீட்டு வாசலில் கற்றாழை, சப்பாத்தி கள்ளி, முள் அதிகம் உள்ள செடிகள், மஞ்சள் ரோஜா செடி ஆகியவற்றை வளர்க்கலாம்.