Daily Horoscope
✕

சங்கடங்கள் அனைத்தையும் நீக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம் !!

Written By Sasikala
Updated: சனி, 29 மே 2021 (13:04 IST)

ஹர' என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தித் திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது  கிருஷ்ணபக்ஷத்தில் வரும் சதுர்த்தி ஆகும். 
 
ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் இவ்விரதத்தை கடைப்பிடிக்கத் துவங்க வேண்டும். செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி  மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை 'மகா சங்கடஹர சதுர்த்தி' என்று அழைக்கின்றனர். 
 
இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான  சந்தோஷத்தை அடைய முடியும். 
 
ஒவ்வொரு மாதமும் வரும் 'சங்கடஹர சதுர்த்தி' நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும். மிகச்  சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும்.

சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரு‌ம்பகு‌தி குறையும்.

எல்லாம் காட்டு

பிறக்காத குழந்தைகளின் உணவை நாம் உண்கிறோம். சத்குரு பேச்சு

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்!.. கட்டண விரைவு தரிசனம் ரத்து!..

புரட்டாசி பிரதோஷம், மகாளய அமாவாசை: சதுரகிரி கோயிலுக்கு நாளை முதல் பக்தர்கள் செல்ல அனுமதி!

சத்குருவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் ‘அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 3.O..

புதிய சாதனையை படைத்த பத்ரிநாத்!.. 17.79 லட்சம் பக்தர்கள் வருகை!...

அடுத்த கட்டுரையில்
Show comments