செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

வைகாசி விசாக நாளில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் !!

வைகாசி விசாக நாளில் விரதம் இருந்து முருகன் சிலை வைத்திருப்பவர்கள் அபிஷேகம் செய்யலாம். ஒவ்வொரு பொருள் கொண்டு அபிஷேகம் செய்யும் பொழுதும் ஒவ்வொரு பலன்கள் கிடைப்பதாக ஐதீகம் உண்டு. 

முருகன் வேல் வைத்திருப்பவர்களும் இந்த அபிஷேகங்களை செய்யலாம். பாலினால் அபிஷேகம் செய்தால் ஆயுள் அதிகரிக்கும். பஞ்சாமிர்தத்தில் அபிஷேகம்  செய்யும் பொழுது நினைத்த காரியம் வெற்றியாகும். சந்தனத்தால் அபிஷேகம் செய்யும் பொழுது சரும பிரச்சனைகள் நீங்கும். பச்சரிசி மாவு கொண்டு அபிஷேகம்  செய்யும் போது எத்தகைய தீராத கடன்களும் தீருமாம். 
 
பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்தால் செல்வம் மென்மேலும் பெருகும். நல்லெண்ணெய் அபிஷேகம் செய்தால் எல்லாமே நன்மையாக நடக்கும்.
 
நெய் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும் அல்லது நல்லெண்ணெய் விளக்கு ஏற்றலாம். திருப்புகழ் படிப்பது, கந்த சஷ்டி கவசம் வாசிப்பது, ‘ஓம்’ என்னும் பிரணவ  மந்திரத்தை 108 முறை உச்சரிப்பது அல்லது ‘ஓம் சரவணபவ’ என்கிற சரவணன் உடைய மந்திரத்தை ஜபிப்பது போன்றவற்றை செய்ய வேண்டும். தம்பதியராக  வைகாசி விசாக விரதம் இருந்து முருகனை வழிபட்டால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உடனே கிடைக்கும். 
 
ஒருவருடைய வாழ்க்கையில் இருக்கும் முக்கிய பிரச்சனைகள் ஆகிய கடன் தொல்லை, பகைவர்கள் தொல்லை, ஆரோக்கிய பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகள் அனைத்தும் நிச்சயமாக தீரும் என்பது நம்பிக்கை. எனவே இந்த நாளை தவறவிடாமல் உங்களால் முழுமையாக விரதமிருந்து கடைப்பிடிக்க முடிந்தால் விரதம் இருக்கலாம் அல்லது ஒருவேளை உணவருந்தி, இருவேளை பாலும், பழமும் மட்டும் சாப்பிட்டு விரதமிருந்து முருகனின் அருளை அனைவரும் பெற்றுக்  கொள்ளலாம்.