திங்கள், 8 டிசம்பர் 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Prasanth K
Last Modified: வியாழன், 18 செப்டம்பர் 2025 (09:01 IST)

அருள் தரும் புரட்டாசி தமிழ் மாத மாத ராசிபலன்கள் 2025! – கன்னி

Kanni
பெருமாளின் அருள் தரும் மாதமான புரட்டாசி மாதத்தில் உங்களுக்கான ராசிபலன் மற்றும் பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்

கிரகநிலை:
ராசியில் சூரியன், புதன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ - தொழில் ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்கிரன், கேது என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:
29.09.2025 அன்று  ராசியில்  இருந்து  புதன்   தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
08.10.2025 அன்று  தொழில்  ஸ்தானத்தில்  இருந்து  குரு பகவான் அதிசாரமாக லாப  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
10.10.2025 அன்று  அயன சயன போக  ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்   ராசிக்கு  மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். பண வரவு கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் சமூகத்தில் அந்தஸ்தும், மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். தூர தேச பிரயாணங்களுக்கான சூழ்நிலை ஏற்படும். சுப நிகழ்ச்சிகளுக்கள் தங்கு தடையின்றி நடைபெறும். வழக்குகள் உங்களுக்கு சாதகமான நிலையில் இருக்கும். ஆரோக்கியக் குறைபாடு நீங்கும். வியாபாரம் லாபகரமாக நடக்கும். அனுபவப்பூர்வமான அறிவு திறன் கைகொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறமை அதிகரிக்கும். பங்கு மார்க்கெட்டில் முன்னேற்றம் காணப்படும். எடுத்த காரியம் நல்லபடியாக நடந்து முடியும். பதவி உயர்வு  கிடைக்கலாம்.

தொழில் நிமித்தமாக வெளியூர் அடிக்கடி செல்ல வேண்டி வரலாம். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். உறவினர்கள் வருகை இருக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகனங்கள் சேர்க்கை இருக்கும். பெண்கள் உங்களது செயல்களுக்கு மற்றவர்களது ஆதரவு கிடைக்கும். கலைத்துறையினருக்கு எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாகலாம். அரசியல்துறையினருக்கு மனதில் தைரியம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடக்கும். எதிர்பாராத அனுபவங்களை பெறுவீர்கள்.

உத்திரம்:
இந்த மாதம் கோபத்தை கட்டுப்படுத்துவதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மை தரும். வீண் செலவை தடுக்க திட்டமிட்டு செயல் படுவது நல்லது. மாணவர்கள் சக மாணவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். மிகவும் பொறுமையுடனும், கவனமாகவும் பாடங்களை படிப்பது அவசியம்.

ஹஸ்தம்:
இந்த மாதம் சாமர்த்தியமாக செயலாற்றுவீர்கல். சில நேரத்தில் இடம், பொருள் தெரியாமலும் செயல்பட்டு விடுவீர்கள். மனதில் நம்பிக்கை உண்டாகும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பேச்சின் இனிமையால் காரிய வெற்றி உண்டாகும். எதிலும் தாமதமான போக்கு காணப்படும். 

சித்திரை:
இந்த மாதம் எதிர்ப்புகள் விலகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தமான போக்கு மாறும். வேகம் பிறக்கும். கடன் பிரச்சனை தீரும். போட்டிகள் மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்க பெறுவார்கள்.  இடமாற்றத்துடன்  பதவி உயர்வு சிலருக்கு கிடைக்கலாம்.

பரிகாரம்: விஷ்ணு சகஸ்ர நாமம்  பாராயணம் செய்து பெருமாளை பூஜிக்க எல்லா தடைகளும் நீங்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

சந்திராஷ்டம தினங்கள்: அக் 08, 09
அதிர்ஷ்ட தினங்கள்:      செப் 20, 21, அக் 17