1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

நம் கஷ்டங்கள் தீர கார்த்திகை மாதத்தில் இவ்வாறு செய்யவேண்டும்...!!

தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்துக்கும் ஒவ்வொரு சிறப்பம்சம் உண்டு. அந்த வகையில், நமது வாழ்வை ஒளிமயமாக ஆக்கும் மாதமாக கார்த்திகை மாதம் கருதப்படுகின்றது.

கார்த்திகை மாதத்தில் தினமும் மாலையில் வீட்டு வாசலில் விளக்கேற்றி வைத்து இறைவனை வணங்கினால், வாழ்வில் உள்ள அனைத்து துயரங்களும் ஒளியைக் கண்ட இருளைப் போல அகலும்.
 
கார்த்திகை மாதத்தில் பிறருக்கு அகல் விளக்கு வாங்கிக்கொடுத்தால், கொடுப்பவரின் பிள்ளைகள், அவரது சந்ததி நற்கதி அடையும்.
சிவபெருமான், மகாவிஷ்ணு என இருவருக்கும் உகந்த மாதம் கார்த்திகை மாதம். இந்த மாதத்தில் செய்யும், சிவ பூஜைக்கும் விஷ்ணு பூஜைக்கும் பன்மடங்கு பலன் கிடைக்கும்.
 
கார்த்திகை மாத துவாதசி நாளில் அன்னதானம் செய்தால், வீட்டில் செல்வம் பெருகும். ஆலயங்களுக்கு விளக்கு வாங்கி கொடுத்தால், வீட்டில் உள்ள சண்டை சச்சரவு, மனஸ்தாபங்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும்.
 
கார்த்திகை மாத துவாதசி நாளில் மகாவிஷ்வுடன் துளசி தேவியின் விவாகம் நடந்தது. ஆகையால், கார்த்திகை மாதம் முழுவதும் துளசி கொண்டு மகா விஷ்ணுவுக்கு அர்ச்சனை செய்தால், வீட்டில் நிலையான பணவரவும், மகிழ்ச்சியும் இருக்கும்.
 
கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில் புனித நதிகளில் நீராடினால், நவகிரக தோஷம் நீங்கும், பிரம்மஹத்தி தோஷம், தெரியாமல் செய்த திருட்டு, பிறருக்கு செய்த துரோகம் ஆகியவற்றால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும்.
 
கார்த்திகை மாத திங்கட் கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு அவர் நினைவுடன் இருந்தால், நம் வாழ்வில் நம்மை ஆட்கொண்டிருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் அவரது அருட்பார்பை சரி செய்யும். தீராத பிரச்சனைகளும் தீர்ந்து போகும்.