Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவகிரக தோஷங்களை போக்கும் நவகிரக மந்திரங்கள்....!!

Written By Sasikala
Updated: திங்கள், 27 ஜனவரி 2020 (13:51 IST)
பூமி தேவியின் கர்ப்பத்தில் உதித்தவன்; மின்னலைப் போன்ற ஒளியினன்; குமாரன்; சக்தி ஆயுதம் தரிப்பவன். அந்த மங்களன் எனும்  செவ்வாயைப் பணிகிறேன்.
 
புதன் மந்திரம்:
 
ப்ரியங்கு கலிகா ச்யாமம் ரூபேண அப்ரதிமம் சுபம்
ஸெளம்யம் ஸெளம்ய குணோபேதம் தம் புதம் ப்ரணமாம்யஹம்.
 
ஞாழல் மொட்டுப்போன்ற ஒளியுடையவன். உருவத்தின் அழகில் உவமை அற்றவன். சந்திரனின் குமாரன். ஸெளம்யமானவன். அந்த புதனைப்  பணிகிறேன்.
 
குரு மந்திரம்:
 
தேவானாம்ச ருஷினாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம்
புத்தி பூதம் த்ரிலோகஸ்ய தம் நமாமி ப்ருஹஸ்பதிம்.
 
தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் ஆசாரியன்; பொன்னன்; மூவுலகங்களின் புத்தி சக்தியாக விளங்குபவன்; அந்தப் பிருஹஸ்பதியை  வணங்குகிறேன்.
 
சுக்கிர மந்திரம்:
 
ஹிமகுந்த ம்ருணாலாபம் தைத்யானாம் பரமம் குரும்
ஸர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்க்கவம் ப்ரணமாம்யஹம்.
 
பனி, முல்லை, தாமரை நூல் போன்ற வெண்மையான நிறமுடையவன்; அசுரர்களின் குரு; எல்லாச் சாத்திரங்களையும் உரைப்பவன். பிருகுவின் புதல்வன்; அந்தச் சுக்கிரனை வணங்குகிறேன்.
 
சனி மந்திரம்:
 
நீலாஞ்ஜன ஸமானாபம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்
சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைஸ்சரம்
 
மை போன்று கறுத்தவன். சூரியனின் குமாரன். யமனின் தமயன். சூரியனுக்கும் சாயா தேவிக்கும் பிறந்தவன். மெதுவாகச் செல்லும் அந்தச்  சனியை நமஸ்கரிக்கிறேன்.
 
ராகு மந்திரம்:
 
அர்த்த காயம் மஹாவீரம் சந்த்ராதித்ய விமர்த்தகம்
ஸிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம் தம் ராஹும் ப்ரணமாம்யஹம்.
 
பாதி உடல் கொண்டவன்; பெரும் வீரன்; சந்திர சூரியர்களைப் பீடிப்பவன்; அகர ஸ்திரீயின் கர்ப்பத்தில் உதித்தவன். அந்த ராகுவைப்  பணிகிறேன்.
 
கேது மந்திரம்:
 
பலாசபுஷ்ப ஸங்காசம் தாரகா க்ரஹ மஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராத் மகம் கோரம் தம் கேதும் ப்ரணமாம்யஹம்.
 
புரசு மரத்தின் பூப்போன்ற செந்நிறம் கொண்டவன். நட்சத்திரங்கள், கிரகங்களில் தலையானவன். கோபி; கோபத்தின் உருவுடையோன். அந்தக்  கேதுவைப் பணிகிறேன். இந்த மந்திரங்களை உச்சரிப்பது உங்கள் மனதில் தெளிவை ஏற்படுத்துவதற்காகவும், வாழ்க்கையில் நலம்  உண்டாவதற்காகவும் தான் என்பதில் சந்தேகமில்லை.

எல்லாம் காட்டு

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments