செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. ‌விநாயக‌ர் சது‌ர்‌த்‌தி
Written By

விநாயகர் சதுர்த்தி நாளில் பூஜையின்போது செல்லவேண்டிய மந்திரங்கள்!!

எந்த ஒரு நற்காரியத்தையும் அந்த விநாயகப் பெருமானை வணங்கி தொடங்கும் வழக்கத்தை கடைபிடிப்பது வழக்கத்தில் உள்ளது. அந்த  வகையில் விநாயகர் சதுர்த்தி அன்று நாம் வீட்டில் பூஜை செய்யும்போது எந்தெந்த மந்திரங்களை கூறுவது சிறந்தது.
விநாயகர் (கணபதி)  மூல மந்திரம்:  
 
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே
வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா
 
விநாயகர் காயத்ரி மந்திரம்: 
 
ஓம் ஏக தந்த்தாய வித்மஹே வக்ர துண்டாய தீமகி தன்னோ தந்த் ப்ரஜோதயாத்:
 
விநாயகர் சகஸ்ரநாமம்:
 
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே
 
கணபதி ஸ்லோகம்:
 
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம் பிறை போலும் மெயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே
 
ஒரு செயலைத் தொடங்கும் முன்பு, அந்தச் செயல் நல்ல விதமாக நடைபெற, விநாயகப்பெருமானை வழிபட வேண்டும் என்பது ஐதீகம். அவ்வாறு செய்தால் அந்தச் செயல் எவ்வித தடங்கலும் இல்லாமல் இனிதாக நடைபெறும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.