2. யோக சித்தி: யோகநிலைக்கானது இது. மூலாதாரத்தை விழிப்பித்து, ஆறு ஆதாரங்களைக் கடந்து சித்தி அனுபவம் பெறுவது. இப்படியான யோக சித்தி கைவரப்பெற்றவர்கள் அரிய சாதனைகளைப் புரியும் வல்லமை கொண்டவர்களாகத் திகழ்வார்களாம்.
3. கரும சித்தி: மூன்றாவதான கரும வகை சித்திகளைப் பெரியோர்கள் போற்றுவதில்லை.
உலகம் தோன்றிய காலம் முதற்கொண்டே மனித மனம் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் அதிகம். அவ்வாறு அவன் வெளியே தேடிக்கண்டு கொண்டவை இவ்வுலக வாழ்க்கைக்குப் பயன்பட்டன. உள்ளே தேடிக் கண்டு கொண்டவையே மெய்ஞ்ஞானம். இது, இக-பரம் இரண்டுக்கும் உற்றத் துணையான ஞானம் ஆகும். இப்படி, சித்தமாகிய அறிவின் அற்புதத்தை அறிந்து இயற்கையை வென்றவர்களே சித்தர்கள் எனலாம். இவர்கள் காயசித்தி பெற்ற உடலுடன் இறவா வரமும் பெற்றவர்களாகத் திகழ்ந்தனர். தாங்கள் அறிந்த ரகசியத்தை உபதேசமாக சீடர்களுக்கு போதித்தனர். யோகம், வைத்தியம், மந்திரம், ஜோதிடம், பூஜா விதிகள் முதலானவற்றையும் சீடர்களுக்குப் பயிற்சியாய் வழங்கினார்கள்.