வியாழன், 9 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By

ஓம் எனும் மந்திரம்; பிரபஞ்ச பயனை அடைய....!

மந்திரங்களுக்கு எல்லாம் மூலாதாரமாக, முதன்மையானதாக, உயிராக இருப்பது ‘ஓம் எனும் மந்திரமாகும். இந்த மந்திரத்துக்கு ‘பிரணவ மந்திரம்’ என்ற பெயரும் உண்டு. ஓம் எனும் மந்திரம் பிரபஞ்ச மந்திரமாகவும் திகழ்கிறது. ஓம் என்பது அ, உ, ம் என்ற மூன்று எழுத்துக்களை உள்ளடக்கியது.
‘ஓம்’ என்ற சொல் தமிழில் பிரணவ மந்திரமாக குறிக்கப்படுகிறது. ஏனென்றால் அதற்குள் நல்ல அதிர்வுகள் உள்ளார்ந்து அடங்கியுள்ளதாக  கண்டறியப்பட்டுள்ளது. ‘டோனோஸ்கோப்’ என்ற கருவியில் ‘ஓம்’ என்ற உச்சரிப்பை கச்சிதமான ஒலி வடிவத்தில் பதிவு செய்தால், அதில் ஸ்ரீ சக்கரம்  உருவம் தென்படுவதை அறியலாம்.
 
பகவத் கீதையானது ஏக அட்சரமாக விளங்கும் ஓம்காரத்தை புகழ்வது குறிப்பிடத்தக்கது. தாயின் கருப்பையில் உள்ள குழந்தைக்கு தொப்புளின் வழியாக உணவு  செல் கிறது. பிறகு குழந்தை வாய் வழியாக உணவை உட்கொள்கிறது. ஓம் காரத்தின் உச்சரிப்பை நாபிச்சுழியில் ஆரம்பித்து, வாயின் உதடுகளில் முடிப்பதை அதனுடன் ஒப்பிடுவது சுவாரசியமானது.
‘ஓம் அக்னிமீளே புரோஹிதம்..’ என்று தொடங்கி, இறுதியில் ‘ஹரி: ஓம்’ என்று ரிக் வேதமானது, ஓம்காரத்தில் தொடங்கி ஓம்காரத்திலேயே நிறைவடைகிறது. அதாவது, ஆரம்பமும், முடிவும் ஓம்காரமாக அமைந்து உலக இயக்கம் யாவும் வட்ட வடிவில் இயங்கி வருகின்றன என்பது தாத்பரியம்.
 
நமது உடல் இயக்க அதிர்வுகள் அனைத்தும் ஒரு புள்ளியில் தொடங்கி, ஒரு வட்டமடித்து மீண்டும் அதே புள்ளியில் வந்து முடிகின்றன. ஓம்கார சின்னம் வரி வடிவம் மற்றும் சப்த வடிவம் ஆகியவற்றில் உலக இயக்கத்தோடு ஒன்றுபட்ட நிலையை உண்டாக்கக் கூடியதாகும்.