Daily Horoscope
✕

விளக்கு வழிபாடும் அவற்றை குளிர வைக்கும் முறைகளும்...!!

Written By Sasikala
Updated: வியாழன், 26 நவம்பர் 2020 (16:51 IST)

இறைவனை ஜோதி வடிவில் வழிபாடு செய்வதால், மனித வாழ்வில் தூய்மையும் தெய்வத்தன்மையும் பெருகுகின்றது. விளக்கு வழிபாடு சுற்றுப்புற இருளைப்  போக்குவதோடு, மனதின் இருளையும் அகற்றுகிறது. விளக்கின் சுடரொளியில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதியும் எழுந்தருளுவதாக  ஐதீகம். இதனால்தான் விளக்கேற்றி இறைவழிபாடு செய்தால், முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒன்றாகப் பெறலாம்.
 
விளக்கில் பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்றுவது நல்லது. பசுநெய் தீபத்தில் அம்பாள் வாசம் செய்வதாக நம்பப்படுவதால், அதை ஏற்றும்போது  சிவமாகிய ஜோதியுடன் இணைந்து சிவசக்தி சொரூபமாகிறது.
 
விளக்கு வழிபாட்டை தினந்தோறும் கடைப்பிடிக்கும் இல்லங்களில் தெய்வபலம் பெருகுவதால், தீய சக்திகள், செய்வினைகள், திருஷ்டிகள் எதுவும் அணுகாது.
 
வெள்ளிக்கிழமை, வீட்டுவாசலில் மாக்கோலம் இட்டு, அதன் நடுவில் விளக்கை ஏற்றிவைத்து, வீட்டு பூஜையறைக்குள், அந்த விளக்கைக் கொண்டு வந்து வைத்தால்,  விளக்குடன் மகாலட்சுமியும் வீட்டுக்கு வருவதாக நம்பிக்கை. வீடுகளில் காலை மாலை இரண்டுவேளைகளிலும் விளக்கேற்றுவது எல்லா மங்களங்களையும் தந்து  வாழ்க்கையை ஒளிமயமாக்கும்.
 
பொதுவாக விளக்கு ஏற்றினால், எண்ணெய் முழுவதும் தீர்ந்து, தீபம் தானாக அணையும் வரை விட்டு விடக் கூடாது. இது கெடுதலைக் கொடுக்கும். விளக்கை  ஏற்றியதிலிருந்து குளிர வைக்கும் வரை விளக்கில் எண்ணெய் இருந்துகொண்டே இருக்க வேண்டும்.
 
விளக்கை குளிர்விக்கும் போது, கைகளை வீசி அணைக்கக்கூடாது. வாயால் ஊதியும் அணைக்கக்கூடாது. விளக்கு என்றல்ல கற்பூரம், மெழுகுவர்த்தி என்று எதையும்  வாயால் ஊதி அணைக்கக் கூடாது. சாஸ்திரப்படி பஞ்சபூதங்களாக நெருப்பு, நீர், நிலம், காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் நாம் வழிபடுவதால், ஒன்றால் ஒன்றை  அணைக்கக்கூடாது. பூக்களால் சாந்தப்படுத்தி அணைக்க வேண்டும். இதையும் பெண்கள்தான் செய்ய வேண்டும். ஆண்கள் செய்யக்கூடாது. 

எல்லாம் காட்டு

புரட்டாசி பிரதோஷம், மகாளய அமாவாசை: சதுரகிரி கோயிலுக்கு நாளை முதல் பக்தர்கள் செல்ல அனுமதி!

சத்குருவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் ‘அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 3.O..

புதிய சாதனையை படைத்த பத்ரிநாத்!.. 17.79 லட்சம் பக்தர்கள் வருகை!...

கேது தோஷம் நீங்க விநாயகர் சதுர்த்தியில் செய்ய வேண்டிய வழிபாடு!

நாளை கிருஷ்ண ஜயந்தி.. தொட்டு வரும் வழக்கங்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments