புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

திருவண்ணாமலையில் ஏற்றப்படும் மஹா தீபத்தின் சிறப்புகள் !!

திருவண்ணாமலையில் வருடம் தோறும் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை திருவிழாவன்று மலைமீது உயர்ந்த தீபம் ஏற்றப்படும். 


இந்த திருவிழா ஆரம்பிப்பதற்கு  முன்பே காப்புக்கட்டப்பட்டு மிகப்பெரிய அளவில் பத்து நாட்கள் உற்சவங்கள் நடைபெறும்.
 
திருவண்ணாமலையில் வருடம் தோறும் கார்த்திகை தீப விழா பெரும்விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி கார்த்திகை தீபத்தன்று மலை மீது மஹாதீபம் ஏற்றப்பட்டு 11 நாட்களுக்கு அந்த தீபம் சுற்றுவட்டாரம் 40 கிமீ தெரியுமளவுக்கு மலை மீது எரியும். பின்பு தீப கொப்பறை கீழே கொண்டு வரப்பட்டு அந்த மை பிரசாதமாக வழங்கப்படும்.
 
இந்த மலைக்கு தீபத்தை ஒட்டி பலர் மலை மீது நடந்து சென்றிருப்பார்கள் இங்கு மலையே சிவனாக வழிபடப்படுவதால் பல பக்தர்கள் இங்கு மலையை மிதித்து வழிபாட்டுக்காக மலை ஏறியதாலும் பரிகார பூஜை செய்யப்படுகிறது.
 
அதன்படி பக்தர்கள் மலை ஏறியதற்கு பிராயசித்த பூஜை தீபத்திருவிழா முடிவடைந்த பின்னர் அண்ணாமலையார் கோயிலில் பிராயசித்த பூஜை நடைபெறும்.