1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

கரூர்: ஆஷாட ஏகாதசியை முன்னிட்டு கருவறைக்குள் சென்று சாமி தரிசனம்

ஆஷாட ஏகாதசியை முன்னிட்டு கரூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்டரிநாதன் ஆலயத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை கருவறைக்குள் சென்று சாமியை தொட்டு வணங்கினர்.
ஆஷாட ஏகாதசியை முன்னிட்டு இந்தியா முழுவதும் உள்ள பண்டரிநாதன் ஆலயத்தில் பக்தர்கள் இன்று ஒரு நாள் மட்டும் கருவறைக்குள் சென்று மூலவரை தொட்டு தரிசனம் செய்ய அனுமதிக்கப் படுவார்கள். இந்நிலையில், கரூர் கூத்தரிசிக்காரர் தெரு பகுதியில் உள்ளது பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பண்டரிநாதன் ஆலயம். இந்த ஆலயம் ஆனது., பழமை வாய்ந்த இந்த  ஆலயம்மஹாராஷ்ரா மாநிலம் பண்டரிபுரத்திலிருந்து பிடி மண் எடுத்து இந்த ஆலயம் நிறுவப்பட்டது. 
 
இந்த ஆலயத்தில் பண்டரிநாதன் ரகுமாயி தாயாருடன் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இந்தாண்டு கடந்த 11 ம் தேதி மாலை துக்காரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று 12 ம் தேதி காலை ஏழு மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் ஆலயத்திற்கு வந்து  கருவறையில் உள்ள மூலவர் மற்றும் தாயாரை தொட்டு வணங்கலாம். 
காலை முதலே திரளான பக்தர்கள் மற்றும் பள்ளி மாணவ, பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு சாமியை தொட்டு தரிசனம் செய்தனர்.  கருவறைக்குள் சென்று சாமியை தொட்டு வணங்குவதால் நினைத்த காரியம் குடும்பத்தில் அமைதி, தொழில் வளர்ச்சி, குழந்தை பேறு,  திருமணத் தடை உள்ளிட்ட நினைத்த காரியம் நடைபெறும் என்பது ஐதீகம். 
 
தொடர்ந்து இன்று மாலை பண்டரிநாதன் சுவாமியின் திருவீதி உலா நடைபெறும், நாளை 13-ம் தேதி காலை 6 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ  பண்டரிநாதருக்கு தீர்த்தவாரி நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர்.