வீட்டில் உள்ள தீய சக்திகளை கண்டறிந்து வெளியேற்றுவது எப்படி..?

ஒரு வீட்டில் எதிர்மறை அதிர்வுகள் இருந்தால், அந்த வீட்டின் மனசஞ்சலங்கள் அதிகரிக்கும். மேலும் பார்க்கும் வேலையில் ஈடுபாடு இல்லாமல் இருப்பது. எதிலும் எளிதில் முடிவு எடுக்க முடியாமல் திணருவது, ஒரு செயலை செய்வதா? வேண்டாமா? என இருவிதமான மனநிலையில் இருப்பது. வீட்டில் உள்ளவர்களுக்கு ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நல கோளாறுகள் ஏற்படுவது போன்ற பிரச்சனைகள்  ஏற்படும்.
சிலர் காலையில் நன்றாக இருப்பார்கள். ஆனால் மாலையில் உடலுக்கு என்னவென்றே சொல்லமுடியாத நிலை ஏற்படும். செய்யும் தொழில்  வியாபாரத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருப்பது. கல்யாணம் மற்றும் சுப நிகழ்வுகள் வீட்டில் நடக்காமல் தள்ளிப் போவது.  வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாமல் இருப்பது அதாவது ஏதோ வேலைக்கு போகிறோம் வருகிறோம் என்று இருப்பது. 
 
பிள்ளைகளில் படிப்பில் மந்த நிலை. பணம் கிடைப்பதற்கு தாமதம். பணம் வந்தும் பற்றாக்குறை போன்றவை ஜாதகத்திற்கு, கிரக  நிலைகளுக்கு அப்பாற்பட்டு, வீட்டிலிருக்கும் எதிர்மறை அதிர்வுகள் காரணமாக, வீட்டிற்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும் ஏற்பட்டிற்கும் கண் திருஷ்டி, மேலும் கணவன் மனைவி குழுந்தைகளுடன் சேர்ந்து வெளியில் கிளம்பும்போது, ஏற்படும் குடும்ப கண் திருஷ்டி, சில குடுபங்களில்  மாதம் ஒருமுறையாவது மருத்துவமனைக்கு செல்வது போன்ற விஷயங்களால், குடும்ப உறுப்பினர்களை பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கு  எளிமையான பரிகாரம் உள்ளது.
இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண, இந்த பரிகாரத்தை பின்பற்றலாம். கல் உப்பு, காய்ந்த மிளகாய் (நீளமானது) 4, எலுமிச்சை பழம் 1.  கண்ணாடி கோப்பை 1, இந்த பரிகாரம் வீட்டில் எதிர்மறை சக்திகளை நீக்கி, நேர்மறை சக்திகளை அதிகரிக்கும் ஒரு எளிய பரிகாரம். இந்த  பரிகாரத்தை செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் செய்யவேண்டும். அப்போதுதான் பலன்கள் அதிகமாக கிடைக்கும். 
 
ஒரு கண்ணாடி பாத்திரத்தில் கல் உப்பை நிரப்பி, ஒரு எலுமிச்சை பழத்தை கல் உப்பின் நடிவில் நிற்க வைக்கவேண்டும். பிறகு நான்கு  காய்ந்த மிளகாயை அதனை சுற்றி நான்கு மூலைகளிலும் சொருக வேண்டும். மிளகாயின் கூர்மையான பகுதி எதிர்மறை சக்திகளை  ஈர்த்துக்கொள்ளும் தன்மை கொண்டது. இதனை தலைவாசல் கதவின் உட்புற பகுதியின் மூலையில் வைக்கவேண்டும். இதனை வாரத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக மாற்றவேண்டும். 
அவ்வாறு மாற்றும்போது அந்த மூன்று பொருட்களையும் (கல் உப்பு, எலுமிச்சை பழம், காய்ந்த மிளகாய்) ஓடும் நீரில் விட்டுவிடலாம் அல்லது மூன்று பொருட்களையும் சேகரித்து யார் காலிலும் படாதவாறு போட்டுவிடவேண்டும். இந்த பரிகாரத்தை செய்வதால் வீட்டில் எதிர்மறை  சக்திகளை நீக்கி, நேர்மறை சக்திகளை அதிகரிக்கலாம்.


இதில் மேலும் படிக்கவும் :