Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உப்பை பயன்படுத்தி வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் நீக்க முடியுமா...?

Written By Sasikala
Updated: செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (17:17 IST)

ஒரு டம்ளர் நீரில் ஒரு சிட்டிகையளவு உப்பு சேர்த்து அதை வீட்டின் தென்மேற்கு மூலையில் வைத்து விடுங்க. இது வீட்டில் இருந்து ஏழ்மை விலக செய்யுமாம்.  இந்த ட்ரிக்கை செய்யும் போது எப்போதெல்லாம் நீரின் வண்ணம் மாறுகிறதோ, அப்போதெல்லாம் நீங்கள் நீரை மாற்றி உப்பு சேர்த்து வைக்க வேண்டுமாம்.
 
உள்ளங்கையளவு உப்பு எடுத்து அதை ஒரு பவுலில் போட்டு அதை குளியலறையின் ஒரு மூலையில் வைத்துவிடவும். இந்த உப்பை சீரான இடைவேளையில்  நீங்கள் மாற்ற தவறக் கூடாது. இது வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்தி குறைந்து, ஏழ்மை நீங்க உதவுமாம்.
 
சிவப்பு துணியில் உப்பு சேர்த்து கட்டி வைக்கவும். அதை வீட்டின் நுழைவாயில் பகுதியில் கட்டி தொங்கவிடவும்.இது வீட்டுக்குள் இருக்கும் கெட்ட சக்தி நீங்கவும்,  நல்ல அதிர்வுகள் நிறையவும் உதவும்.
 
சாப்பிடும் டேபிளில், சாப்பிடும் இடத்தில் உப்பு வைப்பது செல்வசெழிப்பு அதிகரிக்க உதவும். வீட்டில் செல்வம் குறையவே குறையாதாம்.
 
குளிக்கும் டப்பில் ஒரு கைப்பிடி கடல் உப்பு சேர்த்து 20 நிமிடங்கள் குளிப்பதால், நீங்களே கெட்ட சக்திகள் நீங்குவதை உணர முடியுமாம்.

எல்லாம் காட்டு

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments