Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளின் ஞாபக சக்தியை மேம்படுத்த உதவும் கோமதி சக்கரம்...!!

Written By Sasikala
Updated: திங்கள், 2 மார்ச் 2020 (11:14 IST)
 
உங்களது குழந்தைகளுக்கு இதை முயற்சி செய்து பார்க்கலாம். கோமதி சக்கரம். இந்த சக்கரத்தில் போலியானது வாங்கி விட வேண்டாம். உண்மையான கோமதி சக்கரத்தை வாங்கி உங்களது குழந்தைகளின் இரு புருவத்திற்கும் மத்தியில், பொட்டு வைக்கும் இடத்தில் இந்த கோமதி சக்கரத்தை ஒரு மணிநேரம் வைத்துவிட  வேண்டும். 
 
ஒரு வயதிற்கு மேல் இருக்கும் குழந்தைகளுக்கு இந்த முறையை செயல்படுத்தி பார்க்கலாம். இரண்டு, மூன்று வயது குழந்தைகள் எல்லாம் விழித்திருக்கும்போது  இப்படி செய்தால் ஏற்றுக்கொள்ளாது. தூங்கும் சமயத்தில் ஒரு மணிநேரம் நெற்றிப்பொட்டில் நடுவில் இந்த சக்கரத்தை வைத்து விடுங்கள். தவறு ஒன்றும் இல்லை.  கொஞ்சம் விவரம் தெரிந்த வளர்ந்த குழந்தைகளாக இருந்தால், மெத்தையில் படுக்க வைத்துவிட்டு நெற்றிப்பொட்டில் மத்தியில் கோமதி சக்கரத்தை வைத்தவாறு  ஒரு மணி நேரம் இருக்க வேண்டும். 
 
இப்படி தினம்தோறும் செய்து வரலாம். முடியாதவர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் செய்தால் கூட நல்ல பலனைத் தரும். கோமதி சக்கரத்தின் சுழல் வடிவம்,  குழந்தைகளின் மூளை, செயல்படும் தன்மையை சீர்ப்படுத்த முடியும் என்று கூறுகிறது சித்தர்களின் வாக்கு.

சில குழந்தைகளுக்கு இருக்கும் அதிவேக திறனை கட்டுப்படுத்தவும், மந்தமான திறமையை தூண்டவும் இந்த கோமதி சக்கரமானது பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு இயற்கையான பொருள். இதை குழந்தைகளது  நெற்றிப்பொட்டில் வைப்பதில் எந்த ஒரு பிரச்சனையும் வராது.
 
பெற்றோர்கள் சொல்லும் வார்த்தையை காதில் வாங்கிக் கொண்டு செயல்படும் பிள்ளைகள் கிடைப்பது வரம் தானே. இதன் மூலம் மூளையின் ஞாபக சக்தி திறன் அதிகரிக்கப்பட்டு, படித்தது அனைத்தும் மறக்காமல் இருந்து தேர்வில் நல்ல மதிப்பெண் பெற முடியும்.

எல்லாம் காட்டு

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments