Daily Horoscope
✕

பித்ரு தோஷம் நீங்க எளிய பரிகாரங்கள்!!

Updated: சனி, 7 செப்டம்பர் 2019 (14:49 IST)
 
பரிகாரங்கள்:
 
அமாவாசை போன்ற புண்ணிய நாட்களில் பசுமாட்டிற்கு அகத்திக்கீரை, பச்சரிசி வெல்லம், எள்ளு இவற்றை கலந்து கொடுக்கவேண்டும். இப்படி செய்துவந்தால் பித்ரு தோஷத்தின் தாக்கம் குறையும். அதே போல், அவர்களின் நினைவு நாளான்று முறைப்படி தர்ப்பணம் முதலியவற்றை  செய்து அன்னதானம் செய்யவேண்டும்.
 
பித்ரு தோஷம் நீங்க எளிய பரிகாரம் லட்சுமி நரசிம்மர் படம் முன், பால் அல்லது பானகம் வைத்து காலை அல்லது மாலை வேளைகளில்  நரசிம்ம ப்ரபத்தி ஸ்லோகத்தை சொல்ல வேண்டும்.
 
அனுஷம், பூசம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, திருவாதிரை, சுவாதி, சதயம், அவிட்டம் இந்த நட்சத்திரத்தில் அமாவாசை வருமானால்  அன்றைய தினம் சிராத்தம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும். மஹாளய பக்ஷத்ல் வரும் பரணி நட்சத்திரத்தில் திதி கொடுத்தால் மிகவும்  விசேஷமாகும். ஏனொனில் இந்த பரணி மஹா பரணி எனப்படும். அட்சய திரிதியை வரும் நாளில் பித்ருக்களுக்கு சிராத்தம் செய்தால் பித்ரு  தோஷம் நீங்கும்.
 
மேற்குறிப்பிட்டுள்ள நாள்களில் சிராத்தம் செய்தாலோ, அல்லது காளஹஸ்தி சென்று அங்கு பித்ரு பூஜை செய்தாலோ பித்ரு தோஷம்  நிவர்த்தி ஆகும்.

எல்லாம் காட்டு

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments