வியாழன், 28 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

ஸ்ரீ லட்சுமிதேவியை விரதம் இருந்து வழிபட ஏற்ற தினங்கள்...!!

வாழ்நாள் முழவதும் பணத்தின் அம்சமான லட்சுமி தேவியை விரதம் இருந்து வழிபட்டு வருவது செல்வ சேர்க்கைக்கு சிறந்த பரிகாரமாக  இருக்கிறது.
சகல சௌபாக்கியங்களையும் தரும் லட்சுமியை வணங்குவதால் வரலட்சுமி விரதம் என்றழைக்கப்பெறுகின்றது. மிகவும் பக்தி  சிரத்தையோடு இந்நாளில் நோன்பிருந்து வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழலாம் என்பது ஐதீகம்.
 
செல்வ மகளான ஸ்ரீ லட்சுமிதேவியை விரதம் இருந்து வழிபடுவதற்கு அனைத்து தினங்களும் சிறந்தது என்றாலும், வாரந்தோறும் வருகிற  வெள்ளிக்கிழமைகள் மற்றும் ஆடி மாதத்தில் வருகின்ற வரலட்சுமி விரதம், இவை எல்லவற்றையும் விட ஐப்பசி மாதத்தில் வருகின்ற  தீபாவளித் திருநாள் ஆகியவை லட்சுமி தேவி பூஜை மற்றும் விரதங்கள் மேற்கொள்வதற்கு சிறந்த தினங்கள் ஆகும்.
 
இந்த தினங்களில் லட்சுமி தேவிக்கு படையல் வைத்து, தீபங்கள் ஏற்றி, தூபங்கள் கொளுத்தி, லட்சுமி காயத்ரி மந்திரத்தை உங்களால் முடிந்த எண்ணிக்கையில் துதித்து வழிபடுவதால், உங்களுக்கு லட்சுமி தேவியின் பூரண அருள் கடாட்சம் கிடைக்க வழிவகை செய்கிறது.
 
விரத தினத்தன்று லட்சுமி துதி, லட்சுமி வரலாறு போன்றவற்றைச் சொல்லி தங்களை முழுமையாக வழிபாட்டில் ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். அன்று மாலை சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து, பூஜை முடிந்ததும் மங்கலப் பொருட்களுடன் தட்சணையும் வைத்துக்  கொடுத்து அனுப்ப வேண்டும்.