விநாயகரை அர்ச்சனை செய்வதற்கு உகந்த இலைகள்...!

விநாயகப் பெருமானே முழுமுதற்கடவுள். எந்த செயலைச் செய்தாலும் விநாயகப் பெருமானை வழிப்பாடு செய்து தொடங்குவது இந்துக்களின்  வழக்கத்தில் உள்ளது.
பிள்ளையாரின் ஒரு கை பாசத்தை ஏந்தியுள்ளது. அது படைத்தலைக் குறிக்கிறது. எனவே இவரே பிரம்மாவாகிறார். தந்தம் ஏந்திய கை, காத்தலை குறிக்கிறது. எனவே இவரே மகாவிஷ்ணுவாகிறார் துதிக்கை அனுக்ரகம் செய்கிறது. அங்குசம் ஏந்திய கை அழித்தலை  குறிக்கிறது.எனவே, இவா் ருத்ரா் ஆகிறார் மோதகம் ஏந்திய கை அருளைக் குறிக்கிறது. எனவே,இவரே சா்வ சக்தி படைத்த  பரமேஸ்வரனாகவும் இருக்கிறார்.
 
விநாயகருக்கு அருகம்புல் உகந்தது. இது தவிர அவரது பூஜைக்குரிய மேலும் சில இலைகளையும், அதற்கான பலன்களையும் தெரிந்து  கொள்வோம்.
 
முல்லை இலை: அறம் வளரும். கரிசலாங்கண்ணி இலை:  இவ்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும். விஸ்வம் இலை:  இன்பம்,  ஜவிரும்பியவை அனைத்தும் கிடைக்கும். அருகம்புல்: அனைத்து சவுபாக்கியங்களும் கிடைக்கும். இலந்தை இலை:  கல்வியில் மேன்மையை  அடையலாம்.ஊமத்தை இலை: பெருந்தன்மை கைவரப் பெறும். வன்னி இலை: பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள்  கிடைக்கப் பெறும். நாயுருவி: முகப் பொலிவும், அழகும் கூடும். கண்டங்கத்திரி: வீரமும், தைரியமும் கிடைக்கப் பெறும். அரளி இலை:  எந்த  முயற்சியிலும் வெற்றி கிடைக்கும். எருக்கம் இலை: கருவிலுள்ள சிசுவுக்கு பாதுக்காப்புக் கிடைக்கும். மருதம் இலை: மகப்பேறு கிடைக்கும்.  விஷ்ணுகிராந்தி இலை: நுண்ணிவு கைவரப் பெறும். மாதுளை இலை: பெரும் புகழும் நற்பெயரும் கிடைக்கும். தேவதாரு இலை:  எதையும்  தாங்கும் மனோதைரியம் கிடைக்கும். மருக்கொழுந்து இலை:  இல்லற சுகம் கிடைக்கப் பெறும். அரசம் இலை: உயர் பதவியும், பதவியால்  கீர்த்தியும் கிடைக்கும். ஜாதிமல்லி இலை: சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப் பெறும். தாழம் இலை: செல்வச் செழிப்புக் கிடைக்கப்  பெறும். அகத்தி இலை:  கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும். தவனம் ஜகர்ப்பூரஸ இலை: நல்ல கணவன்- மனைவி அமையப்  பெறும்.


இதில் மேலும் படிக்கவும் :