ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 22 ஏப்ரல் 2024 (09:54 IST)

சித்திரா பௌர்ணமி சித்திர குப்தன் வழிபாடு..! சித்திர குப்த மந்திரத்தை ஓலையில் எழுதி வைத்தால் கிடைக்கும் சிறப்புகள்!

Chitra Gupta
சித்திரை மாதத்தில் முழு நிலவு தோன்றும் நாளான சித்திரா பௌர்ணமி பல வகைகளில் பிரபலமான ஒன்றாகும்.



தமிழ் மாதங்கள் அனைத்தும் சந்திரனை மையமாக கொண்டவை. முழு நிலவு நாளில் சந்திரன் எந்த நட்சத்திரத்துடன் சஞ்சரிக்கிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயரே பெரும்பாலும் அந்த மாதத்தின் பெயராக அமையும். அதை மையப்படுத்தியே திருவிழாக்களும் அமையும்.

அப்படியாக இந்த சித்திரா பௌர்ணமி பல வகைகளில் விஷேசமானது. மதுரை கள்ளழகர் வைபவம், திருவண்ணாமலை சித்திரா பௌர்ணமி கிரிவலம் ஆகியவை சிறப்புமிக்கவை. அப்படியான ஒன்றுதான் சித்திரா பௌர்ணமியில் சித்திரகுப்தரை வழிபடுவதும்.


நமது வாழ்க்கையின் பாவ, புண்ணிய கணக்குகளை எழுதுபவர் சித்திர குப்தர். அவருக்கு உகந்த நாளாக சித்திரா பௌர்ணமி உள்ளது. இந்த நாளில் சித்திர குப்தரை வணங்குவது பாவ, புண்ணியங்களை நிவர்த்தி செய்து சிவபெருமானின் கைலாயத்தில் நம்மை கொண்டு சேர்க்கும் என்பது நம்பிக்கை.

மேலும் சித்திரா பௌர்ணமியில் சித்திரகுப்தரை வணங்கி தென்னை ஓலையில் ’சித்ரகுப்தன் படி அளக்க..’ என்று எழுதி வைத்து வழிபட்டு தான, தர்மங்கள் செய்தால் அது மலையளவாக திரும்ப வந்து சேரும் என்பது ஐதீகம்.

சித்திரகுப்தருக்கு காஞ்சிபுரத்தில் சிறப்பான கோவில் உள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சித்திரகுப்தருக்கு தனி சந்நிதியும் உள்ளது.

Edit by Prasanth.K