Daily Horoscope
✕

ஆரோக்கியத்தை பெற்றுத்தரும் மரகத லிங்க வழிபாடு !!

Written By Sasikala
Updated: புதன், 20 ஏப்ரல் 2022 (12:32 IST)
புதனுக்கு உரிய ரத்தினமாக மரகதத்தால் செய்யப்பட்ட சிவ லிங்கத்தை நாம் வழிபாடு செய்வதால் நாம் கேட்ட வரம் தருவார் என ஆன்மிக நூல்கள் கூறுகின்றன.


சில குறிப்பிட்ட ரத்தினங்களுக்கு ஆக்ரஷன் சக்தி உண்டு. அப்படி புதனுக்கு உகந்த மரகத லிங்கத்தை நாம் வணங்கி வர நம் மனக்குறைகள் நீங்கி நாம் நினைத்த வரத்தைப் பெறலாம்.

மரக லிங்கத்தை வழிபட்டு வர ஆரோக்கியம், கல்வி, பெரிய பதவி, அரசருக்கு அடுத்த பதவியைத் தரக்கூடிய யோகத்தைப் பெறலாம். அதோடு நம்முடைய தொழில், வியாபாரம் விருத்தி அடையவும், உத்தியோகத்தில் நினைத்த உயரத்தை அடையலாம்.

அத்துடன் நம்முடைய சகல தோஷங்களும் நீங்கி வாழ்க்கையில் அனைத்து நன்மைகளையும் பெறலாம். மேலும் இந்த மரகத லிங்கத்தை இந்திரன் வழிப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன. இவ்வாறு மரகதலிங்கத்தை வழிபட்டால் தீராத வியாதிகள் குணமடையும் என்பது நம்பிக்கை.

மரகதலிங்கம் என்பது மரகதம் எனும் கனிமத்தால் செய்யப்பட்ட சிவலிங்கமாகும். இந்த சிவலிங்கம் மரகதத்தின் தன்மையால் பச்சை நிறமுடையதாக இருக்கின்றது. இந்த மரகத லிங்கத்தினை தமிழகத்திலுள்ள எண்ணற்ற சிவாலயங்களில் பிரதிஷ்டை செய்து வாழிபாடு செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மரகத லிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்து அதனை அருந்தினால் மிகச்சிறந்த மருத்துவ சக்தியாக இருக்கும். அதே போல மரகத லிங்கத்தின் மேல் சாற்றப்படும் சந்தனத்தைப் பூசிக்கொள்வதால் நல்ல மருத்துவ பலனைத் தரும்.

எல்லாம் காட்டு

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments