Daily Horoscope
✕

திருஷ்டி தோஷங்களை போக்கும் எலுமிச்சம் பழம்..!!

Written By Sasikala
Updated: புதன், 8 ஜனவரி 2020 (12:11 IST)
 
எலுமிச்சம் பழத்தை அரிந்து குங்குமத்தில் தோய்த்து அதை இரு கைகளால் சாறு பிழிந்து திருஷ்டி கழித்து போட திருஷ்டி விலகும். இது புதிய பொருட்களுக்கு செய்யும் திருஷ்டி கழிப்பு முறைகளுள் ஒன்றாகும்.
 
வீடுகள், அலுவலகங்கள் இவற்றின் தலைவாசல் படியில் இரு பக்கங்களிலும் ஒரு எலுமிச்சம் பழத்தின் இரண்டு அரை வட்ட பகுதிகளாக பிளந்து, அதில் குங்குமம் தடவி வைத்துவிட வேண்டும். எவ்வித தீய எதிர்வினை சக்திகளும் உள்ளே செல்வதை தடுக்கும் சக்தி கொண்டதே  குங்குமம் தடவிய எலுமிச்சம் பழம்.
 
எலுமிச்சம் பழம், காய்ந்த மிளகாய், படிகாரம், உத்திரசங்கு இவைகளை ஒரு கறுப்பு கம்பளி கயிற்றில் கட்டி தலைவாசல் படியின் மேற்புறத்தில் தொங்க விட எவ்வித திருஷ்டி தோஷமும் அணுகாமல் பாதுகாக்கும்.
 
வண்டி வாகனங்களில் முன்புறத்தில் பலர் பார்வையில் படும்படியாக 2, 3, 5, 7 என்ற எண்ணிக்கையில் எலுமிச்சம் பழங்களை வரிசையாக அமைத்து ஒரு கயிற்றில் கட்டி தொங்க விட வேண்டும். இதனால் பார்வை திருஷ்டிகளை அறவே தடுக்கலாம்.

எல்லாம் காட்டு

பிறக்காத குழந்தைகளின் உணவை நாம் உண்கிறோம். சத்குரு பேச்சு

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்!.. கட்டண விரைவு தரிசனம் ரத்து!..

புரட்டாசி பிரதோஷம், மகாளய அமாவாசை: சதுரகிரி கோயிலுக்கு நாளை முதல் பக்தர்கள் செல்ல அனுமதி!

சத்குருவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் ‘அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 3.O..

புதிய சாதனையை படைத்த பத்ரிநாத்!.. 17.79 லட்சம் பக்தர்கள் வருகை!...

அடுத்த கட்டுரையில்
Show comments