1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

சகல தோஷங்களையும் நீக்கும் கல் உப்பு பரிகாரம்...!!

கல் உப்பை நாம் அன்றாடம் வைத்து செய்வதன் மூலம் வாழ்வில் பல நன்மைகள் நமக்கு உண்டாகின்றது. உப்பு உணவில் மட்டும் முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை. ஆன்மீக ரீதியாகவும் உப்பு பல்வேறு பயன்களையும் நமது வேண்டுதல்களையும் நிறைவேற உப்பானது  பயன்படுத்தப்படுகிறது.
கடலில் இயற்கையாகவே இந்த உப்பானது தோன்றுகிறது. இது எப்படி தோன்றுகிறது என இதுவரை யாராலும் அறிவியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் சொல்ல இயல முடியவில்லை. உப்பானது செல்வத்தின் கடவுளான லஷ்மி தேவிக்கு இணையாக கூறுகின்றனர்.  ஏனென்றால், லட்சுமி தேவியும் கடலில் தோன்றியதால்தான் உப்பை ஜீவா ஆத்மாவிற்கு இணையாக ஒப்பிடுகின்றனர். ஏனென்றால் நீரில் தோன்றி நீரிலே மறைவதால் ஆன்மீக ரீதியாக ஜீவாத்மா என ஒப்பிடுகிறார்கள்.
 
கடலில் நீராடினால் சகல தோஷங்களும் நீங்கி நம்மை தூய ஆத்மாவாக மாற்றுகிறது. உப்பு வைத்து சுத்தி போடுவதால் நமது உடலில் உள்ள  தோஷங்கள் நீங்கும்.
 
பிரம்ம மூகூர்த்தத்தில் எழுந்து இரண்டு கைகளிலும் கல் உப்பை எடுத்துக்கொண்டு கிழக்குப்புறமாக அமர்ந்து கொள்ளவேண்டும். மடியில் காகிதத்தை வைத்து கைகளை தொடைகளில் வைத்து உள்ளங்கை மேல் நோக்கி இருக்க வேண்டும்.
 
பின்னர், கைகளை இறுக்கமாக உப்புடன் சேர்த்து மூடி கொள்ளவேண்டும். அதன்பின்பு உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை நீங்கள் மனதில் நினைத்து வேண்டுவது எல்லாம் நமக்கு கிடைக்கும். இதனால் வாழ்வில் இன்பமுடனும், எந்த துயரமும் நம்மை அண்டாத வகையில் நாம்  வாழலாம்.