மஹாகணபதி ஹோமம் இந்து சமயத்தின் முழுமுதற் கடவுளான விநாயகரை வணங்கும் விதமாக அமைகிறது. விக்ன விநாயகர் எல்லா தடையையும் நீக்கி வெற்றியை தேடி தருபவர். இன்னல்களை களைபவர்.
எல்லா புது முயற்சிகளுக்கும், கல்விகேள்விகளில் சிறந்து விளங்கவும், திருமண முயற்சிகள் வெற்றியடையவும் விநாயக பெருமானை துதிப்பது நலம். யார்யாருக்கு கேது தசை நடக்கிறதோ, அவர்களும் மஹாகணபதி ஹோமம் செய்வது நல்லது. இந்த ஹோமத்தை வருடம் ஒரு முறை செய்தால் வாழ்வில் வளமும், நலமும் பெருகும். ஒவ்வொரு மாதமும் தங்கள் பிறந்த நக்ஷத்திரத்தில் கணபதி ஹோமம் செய்வதால் வாழ்வில் தடைகள் அனைத்தும் நீங்கும்.