திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் ஊற்றுவது ஏன் தெரியுமா...?

ஆடி மாதம் வந்துவிட்டாலே அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் களைகட்டி விடும். அதில் முக்கியமானது அம்மன் கோவிலில் ஊற்றப்படும் கூழ். ஆடியில் அம்மனுக்கு கூழ் செய்து பக்தர்களுக்கு வழங்கினால், அன்னையின் மனம் குளிர்ந்து அருள் தருவாள் என்பது ஐதீகம்.

ஜமத்கனி முனிவர்ன்னு ஒருத்தர் இருந்தார். சகல கலைகளும் கைவரப்பட்டு, சிறந்த சிவபக்தராகவும், அழகும், சிறந்த குணவதியான ரேணுகாம்பாளை மனைவியாய்  கொண்டும், தந்தை சொல் தவறாத பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாய் வாழ்வதை கண்டு அவர்பால் பொறாமைக்கொண்ட கார்த்த வீரியாச்சுனனின் மகன்கள் ஜமத்கனி  முனிவரை கொன்றுவிடுகின்றனர்.  
 
இந்த துக்கம் தாளாமல் அவர் மனைவி ரேணுகா தேவி தீயை மூட்டி  உயிரைவிட அதில் இறங்கினார். அப்போது இந்திரன் மழையாய் மாறி அத்தீயை அணைத்தான். தீ அணைந்தாலும் ரேணுகாதேவி உடல் முழுக்க தீக்காயம் ஏற்பட்டது. தன் வெற்றுடலை மறைக்கவும், தீக்காயத்தின் சீற்றம் குறையவும்  அருகிலிருந்த வேப்பமரத்தின் இலைகளை பறித்து ஆடையாய் அணிந்துக்கொண்டார். 
 
ரேணுகாதேவிக்கு பசி அதிகமாக அருகிலிருந்த வீடுகளுக்கு சென்று உணவு கேட்டார். அது ஏழை குடியானவங்க வீடு என்பதால் தங்களிடமிருந்த பச்சரிசிமாவும், வெல்லமும், இளநீரும் கொடுத்தனர். அவற்றைக்கொண்டு கூழ் காய்ச்சி பருகி பசியாறினார் ரேணுகாதேவி. 
 
அப்போது சிவப்பெருமான் தோன்றி, உலக மக்கள் வெம்மை நோய் நீங்க நீ ஆடையாய் அணிந்த வேப்பிலையே சிறந்த மருந்தாகும். நீ குடித்த கூழே சிறந்த உணவாகும். இளநீர் சிறந்த நீராகாரமாகும் என வரமளித்து மறைந்தார்.  இந்த சம்பவத்தினை முன்னிட்டே அம்மனுக்கு கூழ்வார்த்தல் தொடங்கியது.