1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

வாசி யோகம் என்றால் என்ன தெரியுமா?

மௌனயோகத்தின் அடிப்படையான வாசி யோகம் செய். வாசி யோகம் செய்து வரும்போது நம்மை பிடித்த வறுமை, துயரம், தோல்வி, பயம், துக்கம், துன்பம் ஆகிய பீடைகள் தானே விலகிப்போகும். நோயுற்ற உடல் ஆரோக்கியமாக மாறி பலம் பெரும்.  இந்த வாசி யோகா பலத்தால் சிவயோகம் சித்தியாகும்.
வாசி யோகா பிராணாயாமம் வெளியே உள்ளவாயுக்கள் காற்று. சுவாசிக்கப்படும் கற்று பிராணன். நெறி படுத்திய சுவாசம் பிராணாயாமம். காலக்கணக்கோடு நெறிபடுத்திய சுவாசம் வாசி. முறைப்படி ஆதார தலங்களில் மூச்சை நிறுத்தி வாசி உருவாக்குவது வாசியோக பிராணாயாமம். 
 
வாசி யோகா பிராணாயாமம் ஐந்து நிலை கொண்டது அவைகள்:
 
1. பூரகம் = மூச்சு காற்றை உள்ளே இழுப்பது.
2. கும்பகம் = மூச்சு காற்றை உள்ளே நிறுத்தல்.
3. ரேசகம் = மூச்சு காற்றை வெளிவிட்டால்.
4. உட்பவிவித்தல் அல்லது கேவல கும்பகம்.
5. ஆதார தலங்களில் நிறுத்தி வாசி உருவாக்கல்.
 
உடம்பை வளர்த்தல் என்பது உடலை கொழு கொழுவென வார்ப்பது இல்லை. 40 வயதை தாண்டினால் உடல் செல்கள், உற்பத்தி ஆவதைவிட சிதையும் செல்கள் அதிகரிக்கும். இது வளர்சிதை மற்றம் வயது  ஆக ஆக சிதைவு அதிகரித்து உடல் அழியும். செல்கள் சிதயாமல் மற்றும் செல் உற்பாத்தி அதிகமானால் உடல் இளமையாகும்.  மரணம் ஏற்படாது. இதுவே உடலை வளர்த்தல்.
 
இவ்விதம் உடலை வளர்க்கும் உபாயம் என்ற தொழில் நுட்பம் அறிந்தேன். அதனால் உடம்பை வளரத்து எனது உயிர் சக்தியும் வளர்த்து இறவா நிலை பெறுவது ஆகும்.