வறுமைகள் நீங்கி அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்க....!

முழு முதற் கடவுளான விநாயகரை வணங்குவதன் பலனாக சனி தோஷம் முதல் ஜாதகத்தில் உள்ள பல விதமான தோஷங்கள் நீங்கும் என்பது உறுதி. அந்த வகையில் தினமும் விநாயகரை வணங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரத்தை தெரிந்து கொள்வோம்.
விநாயகர் காயத்ரி மந்திரம்:
 
ஓம் ஏக தந்ததாய விதமஹே
வக்ர துண்டாய தீமகி
தன்னோ தந்த ப்ரஜோதயாத்:
 
பொருள்: கடவுள்களில் முதன்மையானவரும், உடைந்த தந்ததையும் கொண்டவரே உங்களை நான் வணங்குகிறேன். யானை முகத்தானே எனக்கு சிறப்பான அறிவை தந்து என்னை ஆசிர்வதியுங்கள்.
 
கீழே உள்ள மந்திரத்தை ஜெபிப்பதன் பலனாக குடும்பத்தில் உள்ள வறுமைகள் அனைத்தும் நீங்கி அனைத்து விதமான செல்வங்களும் வந்து சேரும். அதோடு அஷ்ட லட்சுமியின் அருளும் கிடைக்கும்.
 
கெளரி மந்திரம்:
 
ஸர்வ மங்கள் மாங்கல்யே சிவே
ஸர்வார்த்த ஸாதகே
ஸரண்யே த்ரயம்பகே கெளரி
நாராயணி நமோஸ்துதே!
 
பொருள்: சர்வ சக்திகளுக்கும் ஆதி சக்தியான தேவியே, அனைத்து விதமான மங்களங்களையும் அருள்பவளே, ஜீவராசிகள் அனைத்தையும் காப்பவளே, மூன்று கண்களை கொண்டவளே உன்னை வணங்குகிறேன்.


இதில் மேலும் படிக்கவும் :